ஆவடி தொகுதிக்குள்பட்ட திருநின்றவூர் பகுதிகளில் இன்று சாலை, மழைநீர் கால்வாய்ப் பணிகளை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைநீர் கால்வாய் பணிகளை விரைவில் முடிக்கவும், சாலைகளை உடனடியாகச் சீர் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அப்பகுதி மக்களின் குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
'விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை' - அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரை மிரட்டியது மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகவும் தரம் தாழ்ந்த இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதில் தொடர்புடைய நபர் யாராக இருந்தாலும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்யப்படும் நன்மைகளைக் கண்ட விரக்தியில், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது எனத் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொது வெளியில் நச்சுக் கருத்துகளைப் பதிவிடுவது நல்லதல்ல - இயக்குநர் அமீர்