தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், திருப்பூர் அல்லாத வேறு மாவட்டங்களில், கடற்கரையோர மாவட்டங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கடிதம் அளித்தனர்.

By

Published : Nov 4, 2020, 3:25 PM IST

os maniyan minister
os maniyan minister

சென்னை:நாகப்பட்டினம் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறைச் செயலர், அலுவலர்கள், திருப்பூர் ஏற்றமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், திருப்பூர் அல்லாத வேறு மாவட்டங்களில், கடற்கரையோர மாவட்டங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கடிதம் அளித்தனர். ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான இடம் அய்யக்காரன்புலம், 4 செதி கிராமத்தில் 114 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 36 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதைத்தொடர்ந்து தொழில்முனைவோர்கள், மேற்படி பூங்காவில் 94.50 கோடி மதிப்பீட்டில் 36 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளதோடு, திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின்கீழ் நான்காயிரம் நபர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது

மேலும், இந்த அறிக்கை மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெற்றபின், மத்திய அரசின் பங்குத் தொகை 37.80 கோடியுடன், மாநில அரசின் பங்குத் தொகையான 23.62 கோடியையும் சேர்த்து பெற்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்தத் திட்டத்தின் ஒரு பாதி மார்ச் 2021ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details