தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆவின் புதிய நியமனங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு - அமைச்சர் நாசர் - MINISTER NAZAR PRESS MEET ABOUT AAVIN RECURIMENT

ஆவின் நிறுவனத்தில் முறைகேடான நியமனங்கள் ரத்துசெய்யப்பட்டு டிஎன்பிஎஸ்சி மூலமாகத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்

By

Published : Jul 20, 2021, 4:01 PM IST

சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில், 34 பொது மேலாளர்களைக் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து அதன் நிர்வாக இயக்குநர் கந்தசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 20) செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் நாசர், "ஆவின் பொருள்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குப் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

636 பணியிடங்கள் ரத்து

ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதற்குப் பிறகு விற்பனை அதிகரித்துள்ளது, இதனால், பால் கொள்முதலை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்கள் நியமனம்செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அவை அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நியமனம்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: டெலிபோன் ஒட்டுக்கேட்பு- நீதி விசாரணை கோரும் காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details