சென்னை:அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பதனம் செய்து, பேக்கிங் செய்யும் தொழிற்சாலையில் தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி நேரில் சென்று பால் விநியோகம் செய்வதை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பேசுகையில், 'தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், காக்களூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதி உள்ள ஆவின் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு முறையாகப் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதைப் பதனிட்டு விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
படகுகளில் பால் விநியோகம்