தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேளாண் பட்ஜெட் - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆலோசனை

வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஆறு லட்சம் ஏக்கர் கூடுதலாக இந்த ஆண்டு பயிர் சாகுபடி
ஆறு லட்சம் ஏக்கர் கூடுதலாக இந்த ஆண்டு பயிர் சாகுபடி

By

Published : Mar 15, 2022, 8:08 AM IST

சென்னை:வேளாண் பட்ஜெட் வரும் சனிக்கிழமை தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநராக அலுவலகத்தில் நேற்று(மார்ச்.14) ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "பட்ஜெட் குறித்து இதுவரை 250-க்கு மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் அமையும் எனவும் தெரிவித்தார்.

"மேலும் பயிர் சாகுபடி இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் கூடுதலாக செய்யப்பட்டுள்ளதாகவும், 53 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர 114 லட்சத்து 24 ஆயிரம் ஏக்கர் பயிர் சாகுபடி தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளது," என கூறிய அவர் கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி கொடுத்ததையொட்டி கரும்பு சாகுபடி அதிகரித்துள்ளது என விளக்கினார்.

பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், எல்லா கேள்விக்கும் வேளாண் பட்ஜெட்டில் விடை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை போக்குவரத்துத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details