தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரம் மற்றும் விளாத்திக்குளத்தில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்துள்ளார்.
விளாத்திக்குளத்தில் தொழில்பூங்கா அமைக்க இடம் தேர்வு - அமைச்சர் எம்.சி. சம்பத் - அமைச்சர் எம்சி சம்பத்
சென்னை: வீரபாண்டியபுரம், விளாத்திகுளத்தில் தொழில்பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகஅமைச்சர் எம்.சி. சம்பத் உறுதியளித்துள்ளார்.
sambath
கேள்வி நேரத்தில் இதுகுறித்து ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க வீரபாண்டியபுரம் மற்றும் விளாத்திகுளத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.