தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா - 3 ministers
பத்மநாமபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கரோனா
அண்மையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதேபோல், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தற்போது கரோனா தொற்று உள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 3 அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 14, 2021, 10:03 PM IST