தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடுப்பூசி போட்டும் ஒமைக்ரான் பாதிப்பு இருந்தால் வீட்டிலேயே இருங்கள் - மா.சு அறிவுரை - அம்மா மினி கிளினிக்

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாமலிருந்தால், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் வீடுகளிலே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

health Minister Ma Subramanian, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்ரமணியன்

By

Published : Jan 4, 2022, 11:27 AM IST

சென்னை: பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில், கரோனா சிறப்பு சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (ஜன.4) திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், "உலகம் முழுவதும் தொற்று பேரிடர் அதிகமாகிக்கொண்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் தொற்று நூற்றுக்கணக்கில் உயர்ந்து வருகிறது. நேற்றைய (ஜன.3) எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் ஏற்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 800 பேருக்கு தொற்று ஏற்பட்டு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா சிகிச்சை மையம் பெரியார் திடலில் ஆரம்பிக்கப்பட்டு 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியுள்ளனர். தற்போது, கீ. வீரமணி உதவியுடன் அந்த மையம் 41 படுகைகளுடன் இந்தச் சிறப்பு சித்த மருத்துவ மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் குழந்தைகளுக்கு ஒரே நாளில் தடுப்பூசி

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு, அறிகுறிகள் இல்லாமலிருந்தால் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் வீடுகளிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 15 மண்டலங்களில், தொற்று குறித்து கண்காணிக்க மண்டல குழு தொடங்கப்பட உள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து விசாரிக்க உள்ளனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்ரமணியன்

குழந்தைகளுக்கான தடுப்பூசியில் (15 -18 வயது) இந்தியா முழுவதும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 3 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குழந்தைகள் தொடங்கி கிழவர்கள் வரை தமிழ்நாட்டில் தடுப்பூசி போட தயக்கம் காட்டவில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

அம்மா மினி கிளினிக் ஒரு தற்காலிக அமைப்பு

அம்மா மினி கிளினிக் மூலம் பயன்பெற்றவர்களின் பட்டியல் எதுவும் கொடுக்கவில்லை. பழைய கட்டடத்திற்கு பெயிண்ட் அடித்து அம்மா மினி கிளினிக் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில், செவிலியர்கள் கூட இல்லை. அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்பு. அதில் பணிபுரிந்த 1,800 மருத்துவர்கள் மார்ச் 31ஆம் தேதிவரை கரோனா பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் மார்ச் 31 க்கு பிறகு, வேறு மருத்துவ சேவைகளில் பணிபுரிவார்கள்.

முப்பத்தி மூன்று லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தற்போது 27 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா.. ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details