தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு - Minister M. Subramanian inspected in Madurai Government Hospital

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜூரோ டிலே வார்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன்
மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன்

By

Published : May 14, 2021, 10:48 PM IST

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மதுரை வந்தார். தொடர்ந்து மதுரையில் உள்ள பல்வேறு சிறப்பு கரோனா மருத்துவ மையங்கள், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஜூரோ டிலே (zero Delay) வார்டில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு தயார் நிலையில் உள்ள 150 தடையில்லா ஆக்ஸிஜன் வழங்கும் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அவருடன் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை கரோனா சிறப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details