தென்காசி:குற்றாலத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலச்சாரல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவில் புத்தக கண்காட்சி, உணவுத் திருவிழா, கார் கண்காட்சி, வில்வித்தை மற்றும் பாரம்பரிய கலை நடனங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. எட்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிறைவு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பாட்டம், கரகாட்டம் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டைத்தெரிவித்து சிறப்பாக சாரல் திருவிழாவில் பணி செய்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிறைவு விழாவில் ட்ரம்ஸ் மூலம் இசைக்கப்பட்ட ’ஒய் திஸ் கொலவெறி’ சாங்கை ரசித்த அமைச்சர், திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகனின் ’மதுர குலுங்க... மதுர குலுங்க’ பாட்டையும் ரசித்து கேட்டார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஒன்றிய குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவுபெற்ற குற்றாலச்சாரல் திருவிழாவில் அசத்தலாகப்பாடிய பின்னணிப்பாடகர் வேல்முருகன் இதையும் படிங்க:அண்ணாமலை புகைப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்