சென்னை:தமிழ்நாடு பேரவையில் இன்று (மே 06) நேரமில்லா நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவடியில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, ஒருவர் உயிரிழந்து சம்பவம் தொடர்பாக அரசு கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, விஞ்ஞானம் வளர்ந்து விட்ட காலத்தில் இப்படிப்பட்ட மரணம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்று அரசு கவனிக்க வேண்டும் என்றார். ஐஐடி போன்ற நிறுவனங்கள் இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கும் விதமாக பல அறிக்கைகள் கொடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி அரசு, கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், கழிவு நீர் தொட்டியில் வேலை செய்யும் அப்பாவிகளுக்கு மட்டும் ஏன் விஞ்ஞானம் வளரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.