தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஹைட்ரோ கார்பனுக்கு தமிழ்நாட்டில் அனுமதி தரமாட்டோம்' - அமைச்சர் ஜெயக்குமார் - ஹைட்ரோ கார்பன் திட்டம்

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Jan 20, 2020, 2:29 PM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ' மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கொடுக்கவும் கொடுக்காது. மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டுவர முடியாது.

கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறுவது, தூங்குவது போல் நடிப்பது போன்று உள்ளது. அரசு ஒப்புதலே அளிக்காத பட்சத்தில் கொள்கை முடிவு எப்படி எடுக்க முடியும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்ததே திமுக தான். அவர்கள் ஏன் அப்போது கொள்கை முடிவு எடுக்கவில்லை. அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிரானது போன்று ஒரு மாயையை, ஸ்டாலின் உருவாக்க நினைக்கிறார். ஸ்டாலின் மீண்டும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது.

தஞ்சை பெரியக் கோயிலில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற அரசு நிதி அளித்துள்ளது. ஆகம விதியைக் கருத்தில் கொண்டு குடமுழுக்கில் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசு பரிசீலிக்கும் '' என்றார்.

’மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது'

ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், '' ரஜினி எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும். பழமையைப் பற்றி பேசக்கூடாது. இது போன்ற பேச்சுகளை ரஜினி தவிர்க்க வேண்டும் '' எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details