சென்னை:ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராயபுரம், திருவிக நகர் தொகுதி நகராட்சித் தேர்தலுக்கான, அதிமுக விருப்ப மனு விநியோகம் நடக்கும் பணிகளை ஜெயக்குமார் ஆய்வுமேற்கொண்டு விருப்பமனு வழங்கியவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முறையாக ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில உரிமைகள் குறித்து திமுக என்ன குரல் கொடுத்துள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி இருந்ததோ அதே கூட்டணியே தற்போதும் தொடர்ந்து வருகிறது.
நேற்றைய நிலையையும், இன்றைய நிலையையும் என்னால் கூற முடியும். நாளைய நிலையை என்னால் கூற இயலாது. என்றைக்கு ஒரு பெண் இரவு 12 மணிக்கு முழு நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறாரோ அன்றுதான் முழு சுதந்திரம். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் காவல் பணி செய்யும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்துவருகிறது.
பெண்களின் சுதந்திரம் எது?
நேற்று (நவம்பர் 25) அதிமுக கூட்டத்தில் எந்தவிதப் பிரச்சினையும் நடக்கவில்லை. கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாகவே கூட்டத்தை முடித்துச் சென்றோம். ஒரு சில மாவட்டங்களில் பிரச்சினைகள் இருப்பதைப் பேசினோம்" என்றார்.