தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சராக இருந்தபோது பொன்னர் செய்தது என்ன? - ஜெயக்குமார் - ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது அவர் செய்தது என்ன என தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Minister Jayakumar pressmeet
Minister Jayakumar pressmeet

By

Published : Jan 14, 2020, 6:08 PM IST

சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வள துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ச்சியாக அரசை குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அவர் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, அதை நாங்கள் பாஜக கருத்தாகவும் நினைப்பதில்லை. மத்திய அமைச்சராக இருந்தபோது பொன்.ராதாகிருஷ்ணன் எந்தத் திட்டதையும் கொண்டு வரவில்லை. நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக செய்ல்பட்டு பல திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். மத்திய அரசு எங்களுக்கு சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று விருது கொடுக்கிறது. தலைவர் பதவி அவருக்கு கிடைக்குமா என்று நான் ஜோசியம் சொல்ல முடியாது.

ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பு

2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் சிசிடிவி கேமராவுடன் நடத்தப்பட்டிருந்தால் 100% அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அதிமுக கூட்டணி கட்டப்பட்ட கோபுரம், ஆனால் திமுக கூட்டணி கட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டை. அது தற்பொழுது அவிழ தொடங்கியுள்ளது. நீர் பூத்த நெருப்பாக தற்பொழுது திமுக கூட்டணி உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக ஒன்றிய பெருந்தலைவர் பதவி ஒரு குடும்பத்திற்கு சொந்தம்

ABOUT THE AUTHOR

...view details