ராயபுரத்தில் எந்த விளையாட்டுப்போட்டிகள் என்றாலும் உடனே வருகைதந்து தொடங்கிவைப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். அதிலும் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இளைஞர்களோடு இளைஞனாய் மாறி சிறிது நேரம் புத்துணர்ச்சியோடு விளையாடி அங்கிருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
இளைஞர்களுடன் ஜாலி கேம்: கால்பந்தாட்டத்தில் கலக்கிய ஜெயக்குமார்! - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: ராயுபுரத்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கறே்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் இளைஞர்களுடன் உற்சாகத்துடன் கால்பந்தாடினார்.
Minister Jayakumar
சென்னை ராயபுரத்தில் இளைஞர்களுக்கான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைத் தொடங்கிவைப்பதற்காக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக வந்தார்.
அப்போது போட்டியைத் தொடங்கிவைத்து இளைஞர்களுடன் கால் பந்தாடி மகிழ்ந்தார். அப்போது மைதானத்தின் பாதி தூரத்தில் இருந்து பந்தை எடுத்துவந்து கோல் அடித்து அசத்தினார். அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள், இளைஞர்கள், அமைச்சர் ஆட்டத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.