தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கடலில் கரைத்த பெருங்காயம் போல திமுகவின் நிலை!' - Minister Jayakumar talks about the release of Sasikala

சென்னை: மியான்மாரிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்த காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்களை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார். பின்னர் பேசிய அவர், கடலில் கரைத்த பெருங்காயம் போல திமுகவின் நிலை ஆகிவிட்டதாக கேலி செய்தார்.

காசிமேடு மீனவர்களை வரவேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
காசிமேடு மீனவர்களை வரவேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

By

Published : Oct 8, 2020, 5:14 PM IST

Updated : Oct 8, 2020, 5:28 PM IST

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல். தேசப்பன் உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கரை திரும்பாததால் இந்திய கடலோர காவல்படையின் மூலம் அவர்களைத் தேடும் பணி நடந்துவந்தது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள், அந்நாட்டில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில், பாபு என்ற மீனவர் கடலில் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன.

மியான்மர் நாட்டில் உள்ள மீனவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதினார்.

காசிமேடு மீனவர்களை வரவேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இதையடுத்து மீனவர்கள் சிறப்பு விமானத்தில் நேற்று (அக்டோபர் 7) டெல்லி அழைத்துவரப்பட்டனர். இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்த மீனவர்களை அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியான்மர் நாட்டிற்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "வரும் காலங்களில் மீன்பிடி படகுகளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு மீனவர்களுக்குச் சாட்டிலைட் செல்போன்களும் கொடுக்கப்படும். திமுக ஆட்சிக்காலத்தில் நிதிநிலை சீர்குலைந்தது. தற்போது தமிழ்நாடு நிதி தன்னாட்சி பாதுகாக்கும் மாநிலமாக இருந்துவருகிறது.

சசிகலாவின் சொத்துகளை முடக்கம் செய்தது நீதிமன்றமும், வருமான வரித்துறையும். அவரின் விடுதலை குறித்து நீதிமன்றம்தான் முடிவுசெய்யும். என்னால் அதைக் கூற முடியாது. கண்டிப்பாக 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக இருப்பார். தொடர் பரபரப்புகளால் கடலில் கரைத்த பெருங்காயம்போல திமுகவின் நிலை ஆகிவிட்டது" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மீனவர் ரகு கூறுகையில், "கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு இன்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கிக் கொண்டோம். இதையடுத்து 58 நாள்களுக்குப் பிறகு மியான்மர் கடற்படையினர் எங்களை மீட்டனர்.

எங்களைப் பாதுகாப்பாக வைத்து உணவுகள் வழங்கினர். எங்களுடன் வந்த பாபு என்பவர் படகில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய கடலில் இறங்கியபோது மாயமானார். விரைவில் அவரை மீட்டுத் தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘அரசு தன் கடமை செய்கிறது, அதுபோல் மக்களும் கடமையைச் செய்ய வேண்டும்’ - ஜெயக்குமார்

Last Updated : Oct 8, 2020, 5:28 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details