சென்னை:சென்னை கொளத்தூர் அஞ்சுகம் நகரில் வசித்து வருபவர் சதீஷ். இவர் அண்ணா சிலை அடுத்த சுண்ணாம்பு கால்வாய் அருகே கடந்த 10 ஆண்டுகளாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தனது பெட்ரோல் பங்க் நடத்தும் உரிமையை அமர்நாத்துக்கு சதீஷ் கொடுத்துள்ளார். அதற்கு சதீஷ், அமர்நாத்திடம் இருந்து ரூபாய் 15 லட்சம் முன்பணமாக பெற்றதாகத் தெரிகிறது.
சதீஷ் எழுதிக்கொடுத்த ஒப்பந்தம் காலாவதி ஆனதும் அந்த பெட்ரோல் பங்கை சதீஷ் தொடர்ந்து நடத்தி வந்தார். இதற்கிடையில் அமர்நாத் கொடுத்த பதினைந்து லட்சத்திற்கு சதீஷ் ரூ.10 லட்சம் வரை திருப்பி கொடுத்து, மீதமுள்ள பணம் ஐந்து லட்சத்தை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் அமர்நாத், பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் மற்றும் டீசலை எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்ற தொகையை திருப்பிச்செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது.
அந்தத் தொகை கழித்ததுபோது மீதத்திற்கு, அமர்நாத் வேறொரு பெட்ரோல் பங்கில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஊற்றப்படும் ஆயில்கள், அதற்கான விலை சேர்த்து ரூபாய் 5 லட்சம் தர வேண்டும் எனக்கேட்டு, கடந்த மூன்று மாதங்களாக சதீஷிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிகிறது.
5 பேர் கொண்ட கடத்தல் கும்பல்:இதனால் இருவருக்கும் தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை சதீஷ் தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு காரில் சென்றுள்ளார். மனைவி வீட்டருகே சென்ற நிலையில் சதீஷை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் சதீஷின் உறவினர் சரவணனுக்கு தொலைபேசியில் சதீஷ் தொடர்பு கொண்டு தான் கடத்தப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க, பின்னர் கடத்தல்காரர்கள் அவரிடம் பேசிய அடையாளம்தெரியாத நபர்கள் சதீஷ், அமர்நாத்துக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 5 லட்சம் பணத்திற்காக கடத்தி வைத்துள்ளோம் என்று கூறினர். மேலும் அமைச்சர் கொடுத்த வேலையைத் தாங்கள் செய்வதாகவும், பணத்தை கொடுத்து சதீஷை மீட்டுக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் சதீஷ் தரப்பில் புகார் அளித்தனர். கடத்தப்பட்ட இடம் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை என்பதால் புகாரை அங்கு கொடுக்குமாறு தெரிவித்த போலீசார் இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான ஆடியோ வைரலாகி வருகிறது. கடத்தல்காரர்கள் தெரிவித்த அமைச்சர் யார்? சதீஷை எங்கு கடத்தி வைத்துள்ளார்கள்? ? கடத்தல் காரர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல்; அமைச்சருக்குத் தொடர்பு - வெளியான அதிர்ச்சி ஆடியோ இதையும் படிங்க:எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ