தருமபுரி மாவட்டத்திற்கு கூட்டுறவுத்துறை சார்பில் புதியதாக 118 நகரும் நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று (அக்.15) பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் கும்மனூர், பஞ்சப்பள்ளி, ஏரி பஞ்சப்பள்ளி, திருமல்வாடி, ஜெர்த்தலாவ் உள்ளிட்ட 10 கிராமங்களில் நகரும் நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சென்று விநியோகிக்கும் பொருட்டு, தருமபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படுகிறது.
அம்மா நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த அமைச்சர்! - தர்மபுரி செய்தி
தருமபுரி: பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில், 10 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார்.
மக்கள் நியாய விலைக்கடையின் மூலம் வழங்கப்படும் அாிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை செவ்வாய் கிழமைகளில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதாரர்கள் இருப்பின் அவர்கள் பின்நாள்களில் தாய்க்கடையில் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.