மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுக்க 30 நடமாடும் மருத்துவக் குழு வாகன;ஙகள்,100 நிலவேம்பு குடிநீர் வழங்கும் வாகனங்கள், 30 கொசு ஒழிப்பு இயந்திர வாகனங்கள் என மொத்தம் 160 வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது எனவும், தொடர்ந்து ஏழு நாட்கள் மக்களுக்கு நிலவேம்பு அளிக்கும் வகையில், நடமாடும் நிலவேம்பு வாகனம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தளபதி விஜய்யின் கானா பாடலுக்கு லொஸ்லியா ஆடிய குத்தாட்டம்!
அதுமட்டுமின்றி டெங்குவை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் நடமாடும் மருத்துவக்குழுக்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், டிசம்பர் மாதம் வரை இந்த குழுக்கள் இப்பணியில் ஈடுபடும் என்றார். டெங்குவை ஒழிக்கத் தனியாக நிதி ஒதுக்கி, அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது எனவும், ஒரு வார காலத்தில், தினசரி ஒரு லட்சம் மக்களை இந்த வாகனம் சென்றடைய உள்ளதாகக் கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி எனவே பொதுமக்கள் தானாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், அதேபோல் குழந்தைகளுக்குக் காய்ச்சல் தொடங்கிய உடனேயே மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும் என்றார். வட சென்னை பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என அனுமதிக்க மறுப்பதாகப் புகார் வந்துள்ளது குறித்த கேள்விக்கு, ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுவாக உள்ள அறை வசதியைத் தாண்டி, பல்வேறு இடங்களில் புதிதாகச் சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.