சென்னை: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தொடர்பாக 36 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது.
சொத்துகளின் மதிப்பு
இதில் ரூபாய் 5.5 லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவணி, ரூ. 25 கோடி மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தகம் முதலீடுகள், 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை இன்று தெரிவித்துள்ளது.