சென்னை:பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள பென்னி குயிக் சிலையை பார்வையிட சென்ற கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழ்நாடு அரசு சார்பில் கேம்பரளி நகரத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முல்லை பெரியாறு கட்டிய பென்னி குயிக் நினைவை போற்றும் வகையில் பென்னிகுக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பரளி நகர மைய பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சிலையை நிறுவ இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இன்று (செப். 10) மாலை சிலை திறக்கப்பட உள்ள நிலையில், இதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு முறை பயணமாக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்.எல்.ஏக்களான ராமகிருஷ்ண்ன், மகாராஜன், சரவணக்குமார், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்றனர்.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு பிரிட்டனில், அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் தூவி மரியாதை இந்நிலையில் கேம்பரளி நகரத்தில் உள்ள கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பயணித்த அனைவரும் அப்போது உடனிருந்தனர்.
இதையும் படிங்க:இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர்