தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்தானது ஏன்... காரணம் என்ன?

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் அமைச்சா் துரைமுருகன் இன்று (மார் 29) மேற்கொள்ள இருந்த துபாய்ப் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து ஆனது

அமைச்சா் துரைமுருகன்
அமைச்சா் துரைமுருகன்

By

Published : Mar 29, 2022, 9:58 PM IST

சென்னை:தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் இன்று (மார்ச் 29) காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமானநிலையம் வந்தாா். அவருடைய விசாவில் ஏதோ பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டாா். அதன் பின்பு, அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு, பின் மீண்டும் மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது.

சென்னை சர்வதேச விமானநிலையம்

அமைச்சரின் புது விசா:இதைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்த அமைச்சரை ஏா் இந்தியா விமான நிறுவன அலுவலர்கள் வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்துச்சென்றனா். பின், அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து, விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா். ஆனால், விமானம் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சா் துரைமுருகன், ஏா் இந்தியா விமான அலுவலர்களை அழைத்தாா்.

பயணத்தில் விருப்பமில்லை:அவர்களிடம், 'நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை. எனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிவிடுகிறேன்' என்று கூறினாா். அலுவலர்களும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய பயணத்தை ரத்து செய்து, அவரை ஆஃப்லோடு செய்தனா். அமைச்சா் விமானத்திலிருந்து இறங்கி அவருடைய காரில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றாா்.

10 நிமிடங்கள் தாமதம்: இதனால், ஏா் இந்தியா விமானம், 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 7 மணிக்கு துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றது. அமைச்சா் துபாய் செல்ல இரண்டு முறை சென்னை விமானநிலையத்திற்கு வந்துவிட்டு, பயணம் செய்யாமல் இரு முறையும் வீட்டிற்குத் திரும்பிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜூலை 24இல் குரூப் 4 தேர்வு - 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

ABOUT THE AUTHOR

...view details