தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் - தீவிர சிகிச்சை

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

minister
minister

By

Published : Oct 13, 2020, 7:13 PM IST

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் துரைக்கண்ணு (72). முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு செய்தியறிந்து, அவருக்கு ஆறுதல் கூறுவதற்காக, அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து இன்று அதிகாலை சேலத்திற்கு புறப்பட்டார்.

விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர், விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு, மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த துரைக்கண்ணு, 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் பாபநாசம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ஜெயலலிதாவால் 2016 ஆம் ஆண்டு வேளாண்துறை அமைச்சராக பதவியளிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிங்க: கே.கே.நகர் திமுக பிரமுகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு!

ABOUT THE AUTHOR

...view details