தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சைரன் விவகாரம்: வரலாறு தெரியாமல் பேசாதீங்க துரைமுருகன்!' - முன்னாள் முதல்வர் காமராசர்

அமைச்சர் துரைமுருகன் தன்னை சுய பரிந்துரை செய்து காமராஜர் பற்றி பேசியதைத் திரும்பப் பெற வேண்டும் எனச் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ செல்வப்பெருந்தகை
எம்எல்ஏ செல்வப்பெருந்தகை

By

Published : Jan 12, 2022, 4:40 PM IST

சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் குழு சார்பில் பொங்கல் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. இதற்குத் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி சுசிலா கோபாலகிருஷ்ணன், மலர்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இவ்விழாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாநில துணைத் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநிலச் செயலாளர் கடல் தமிழ்வாணன், மகளிர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிறகு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மகளிர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்படுகிறது. பிரியங்கா காந்தியின் பிறந்த நாளும் காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன் வயதில் முதிர்ந்தவர், அனுபவமிக்கவர், அவை முன்னவர் அவர் காமராஜரைப் பற்றி கூறியது வருத்தமாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜரைப் போன்ற எளிமையான முதலமைச்சரை உலகமே பார்த்ததில்லை. அவரைப் பற்றி பேசும்போது சிந்தித்துப் பேச வேண்டும்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் வாகனத்தில் செல்லும்போது எனக்கு எதுக்கு சைரன், நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன் எனக்கு எதற்கு பாதுகாப்பு என சைரனை நிறுத்தியவர் அவர். ஆனால் காமராஜர், பக்தவத்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி என அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

கருணாநிதியின் மீது அனைவரும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம் எனத் தெரியும். கல்வித் துறையில் காமராஜரும், உயர் கல்வித் துறையில் கருணாநிதியும் பல்வேறு சிறப்புகளைச் செய்தனர் என்பதை உலகம் அறியும், ஆகையால் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். சட்டப்பேரவையில் அனைத்தும் பதிவுசெய்யப்படுகிறது.

அதேசமயம் காங்கிரஸ் அல்லாத மக்களும் காமராஜரை நேசிக்கின்றனர். ஆகையால் துரைமுருகன் மீண்டும் அவர் தன்னை சுய பரிந்துரை செய்து தான் பேசியதைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் இந்திரா காந்தி, காமராஜரைப் பற்றி பேச வேண்டாம் என வேண்டுகோள்வைக்கிறோம்.

காங்கிரசை பற்றி பேச பாஜகவிற்கு எவ்விதத் தகுதியும் இல்லை. காங்கிரஸ் பேரியக்கம்தான் நாட்டை உருவாக்கியது, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, தொழிற்புரட்சி உள்ளிட்ட புரட்சியை ஏற்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு. நேரு சம்பாதித்த சொத்துகளை பாஜகவும் மோடியும் அழித்துவருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாய்னா நேவாலிடம் ட்விட்டரில் வம்பு; நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு?

ABOUT THE AUTHOR

...view details