தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Crop Damage TN பயிர் சேதம்: முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் (Crop Damage) தொடர்பான அமைச்சர் குழுவின் (Minister Committee) அறிக்கை நாளை (நவம்பர் 16) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

dfasd
dfe

By

Published : Nov 15, 2021, 10:38 AM IST

Updated : Nov 15, 2021, 12:25 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த வாரம் பெய்த பெருமழையால் பயிர்கள் சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி நாசமாகின.

இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினை (Minister Committee) அமைத்து மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் அறிக்கை நாளை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. பயிர் சேதங்களுக்கு (Crop Damage) நிவாரண உதவியை ஸ்டாலின் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

Last Updated : Nov 15, 2021, 12:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details