சென்னைதலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை கூட்ட அரங்கில், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று (ஆக.18) நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பட்ஜெட் கூட தொடரில் நிறைவேற்றிய திட்டங்களில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டது என விவாதிக்கப்பட்டது. மேலும், மீதமுள்ள திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்தும், பட்ஜெட் அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் மணிகண்டன், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் அறிவொளி, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமா வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கல்வித்தொலைக்காட்சி விவகாரத்தில் அரசாங்கமும், நானும் ஏமாந்துவிடமாட்டோம்... டிரெண்டிங் குறித்து அன்பில் மகேஷ்