சென்னை:2003ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்பொழுது 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர் பணிக்கு வருவதற்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டுமென வெளியிடப்பட்ட அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் 177 ஆவது வாக்குறுதியில், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி வருகிறார் என குற்றம் சாட்டினர்.