சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து ஒன்றிய அரசு ஜூன் 1ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் குறித்து, நேற்று முன்தினம் (ஜூன் 2) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர் நிபுணர் குழு என பல்வேறு தரப்பினரிடம் மின்னஞ்சல், இலவச அலைபேசி எண் ஆகியவற்றில் கருத்து கேட்கப்பட்டு, இரண்டு நாள்களில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.