சென்னை: தமிழ்நாட்டில் எந்தப் பகுதிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி சென்றாலும் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரடியாகச் சென்று ஆய்வுமேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், திருக்கோவிலூர் வட்டம் அரகண்டநல்லூரில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆய்வுசெய்தார்.
திடீர் ஆய்வுமேற்கொண்ட அன்பில் மகேஷ் தலைமை ஆசிரியர்களிடம் மாலை மரியாதைகளும், வரவேற்புகளும் தனக்கு வேண்டாம் எனப் பலமுறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் பின்பற்றி அன்பில் மகேஷ் எளிமையாக இந்த ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வில் பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருவதாக உறுதியளித்து அன்பில் மகேஷ் விடைபெற்றார்.
இதையும் படிங்க: கொடி நாள் நிதி - ஆளுநர் வேண்டுகோள்