தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி - hospital

டெங்கு பாதிப்பு காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Sep 27, 2022, 12:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சில நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details