சென்னை: புழலில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களும், ஊடகத் துறையினரும் பங்கேற்க வேண்டும். அதற்காக அரசு வெளியிட்டுள்ள இணையதள பிரிவில் இதுவரை 5 ஆயிரத்து 848 பேர் பதிவு செய்துள்ளனர்.
அரசு 2 லட்சம் பேரை எதிர்பார்க்கிறது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 20 மாணவருக்கு ஒரு தன் ஆர்வலர் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில். அதன் தற்போதைய நிலை குறித்து ஆராய மாநில, மாவட்ட ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காணொலி வாயிலாக குழுக்களிடம் இருந்து தகவல்கள் பெற்று குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களின் பொருளாதார பிரச்னை, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக அரசு பள்ளிகளில் புதிதாக 2.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வீடு தேடி கல்வி திட்டத்தை அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மூன்றாவது அலை வர வாய்ப்பு இல்லை என கூற முடியாது - ராதாகிருஷ்ணன் தகவல்