தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்எட் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -அமைச்சர் அறிவிப்பு

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் (எம்.எட்.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 7ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

எம்எட் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
எம்எட் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By

Published : Jan 6, 2021, 6:03 PM IST

இது குறித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை கல்வியியல் (எம்எட்) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 7ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை https://www.tngasaedu.in/ என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம்.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவுசெய்ய பதிவுக் கட்டணம் 2 ரூபாய், விண்ணப்பக் கட்டணம் 58 ரூபாய் சேர்த்து ரூ.60 ரூபாய் செலுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வுசெய்தல் வேண்டும்.

மேலும், மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது சான்றிதழ்களை https://www.tngasaedu.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம்செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் https://www.tngasaedu.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவுசெய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர் 044-22351014, 044-22351015, 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம், வழிகாட்டுதல் பெறலாம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு: அறிவியல்பூர்வமாக விசாரணை - சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலீப்

ABOUT THE AUTHOR

...view details