சென்னை:தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் தாக்கல்செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்துவருகிறது.
கடலோர மாவட்டங்களிலிருந்து தாது மணலை எடுப்பதற்குத் தடைவிதித்தும், ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வி. சுரேஷ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
அதன்படி வழக்கறிஞர் வி. சுரேஷும் தனது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். அந்த அறிக்கையில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதின் காரணமாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.