தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கான பயணச் செலவை அரசே ஏற்கும்! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - வெளிமாநிலத் தொழிலாளர்கள்

சென்னை: வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் செல்ல ஆகும் பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

workers
workers

By

Published : May 9, 2020, 4:22 PM IST

மாநிலம் முழுவதும் கரோனா தொற்றை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வேலைக்காக வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து தங்கியிருந்த தொழிலாளர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வேலை, வருமானமின்றி உணவுக்கே வழியில்லாத நிலை வந்ததால், சொந்த ஊர் செல்ல தங்களை அனுமதிக்க வேண்டுமென கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதித்து அரசு உத்தரவிட்டது. மேலும், அனுமதிச் சீட்டு வேண்டி அரசு இணையதளத்தில் அவர்களை விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அதற்குரிய பயணச் செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்

ABOUT THE AUTHOR

...view details