தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் என்ன? - கரோனா காலத்தில் மாற்றுதிறனாளிகள்

சென்னை: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்த முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-order-to-state-government-to-file-a-report-of-the-relief-provided-to-disabled
mhc-order-to-state-government-to-file-a-report-of-the-relief-provided-to-disabled

By

Published : Jun 28, 2021, 4:42 PM IST

Updated : Jun 28, 2021, 6:12 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஜூன்.28) விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "பார்வை மாற்றுத் திறனாளிகள், ரயில்களில் பென்சில், புத்தகம் உள்ளிட்டவை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி கோரப்பட்டது. ஆனால், ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.

அதேசமயம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், பொதுமக்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். அதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு முழுவதும் 1,94,449 மாற்றுத் திறனாளிகளுக்காக 58 கோடியே 33 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய நிலை குறித்த அறிக்கையையும் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து நீதிபதிகள், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

எனவே தமிழ்நாடு அரசு, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கியுள்ளது. அத்துடன் எந்தெந்த வகையினருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவர்களுக்கு விருது

Last Updated : Jun 28, 2021, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details