தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த உத்தரவு - camera in tamilnadu massage centers

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடும்படி டிஜிபிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 23, 2021, 7:30 PM IST

சென்னை:விழுப்புரம் மாவட்டம்ஆரோவில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்திவரும் சி.பி.கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எனது ஆயுர்வேத சிகிச்சை மையம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டுவருகிறது.

ஆனால், சோதனை என்னும் பேரில், காவல்துறை அடிக்கடி தலையிடுகின்றனர். எனவே, சட்டரீதியான செயல்பாடுகளில் காவலர்துறை தலையிடக்கூடாது என்று உத்தவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி விசாரிக்கையில், காவல்துறை தரப்பில் புகார்கள் வரும்போது மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கூறுகையில், ஆயுர்வேத சிகிச்சை, ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், சோதனை நடத்தப்படுகிறது.

காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இது குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும். குற்றங்களை தவிர்க்க, சென்னை மாநகராட்சியில் உள்ளது போல், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த மாநில டிஜிபி உத்தரவிட வேண்டும்.

அதோபோல வெளிப்படைத்தன்மையாக ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் நடத்தப்படுகிறதா என்பதை அவர் உறுதி செய்யவேண்டும். குறிப்பாக கண்காணிக்கும்போது சந்தேகத்திற்கிடமாக செயல்கள் இருந்தாலோ? தகவல்கள் கிடைத்தாலோ? சட்டவிதிகளின்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சென்னையில் 63 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்க பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details