தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேரூராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி - சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
உத்தரவு

By

Published : Mar 31, 2022, 6:53 AM IST

சென்னை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரனட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வனிதா, 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற போதும், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட ராகினி என்பவர் 7 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதற்காக ராகினியின் தந்தை, வாக்குச் சீட்டுகளை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதனால், தனக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழ் திரும்பப் பெற்றதாக கூறி, சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக போட்டி வேட்பாளரான வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சான்றிதழ் வழங்க உத்தரவு: இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது, பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பார்வையிட்டதில் மனுதாரர் வெற்றி பெற்றது தெரிய வந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ரகளையில் ஈடுபட்ட ராகினியின் தந்தைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: 'இனி ஐடி பார்க்குகளிலும் பப் நடத்திக்கோ' - ஒப்புதல் அளித்த கேரள அமைச்சரவை

ABOUT THE AUTHOR

...view details