சென்னை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவப்பொருட்கள், எழுது பொருட்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாகப் போலிக்கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை பாதுகாப்பு மைய இயக்குநருமான பி.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடந்த இந்த ஊழலில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.
சிறைக்குள்ளும் ஊழல்
பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலிக்கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு பொருட்கள் உற்பத்தி செய்து, அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பித்துள்ளதாகவும், இந்த முறைகேட்டில் அப்போதைய சிறைக் கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.