சென்னை: கோவையில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தனது கணவருக்குக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக்கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கெனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக இவ்விவகாரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தாம்பத்திய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால் இதுகுறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு, அதாவது தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதன்படி, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து தீர்ப்பளித்துள்ளது.