தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊழல் என்னும் புற்றுநோய் நம்மைக் கொல்கிறது - சார் பதிவாளர் இடமாற்றம் தொடர்பாக நீதிமன்றம் கருத்து - ஊழல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன்

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 8, 2021, 3:26 PM IST

Updated : Apr 8, 2021, 5:27 PM IST

15:14 April 08

சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 70 ஆயிரத்து 60 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.

2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபால கிருஷ்ணனை செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இடமாற்றமானது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும், லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என 'கருப்பு எழுத்து கழகம்' என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஊழல் என்னும் புற்றுநோய் நம்மை கொல்கிறது. ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடப்பதாகவும், நீர் நிலைகள் மாயமாவதாகவும்" நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது? அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது? என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலில் ரூ.19.80 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் - இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்!

Last Updated : Apr 8, 2021, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details