தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்வில் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை - No Salary Hike for Teachers Unqualified in TRB

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும் 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Apr 8, 2022, 1:14 PM IST

சென்னை: மத்திய அரசு 2009ஆம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று 2011ஆம் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நேற்று (ஏப். 7) நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், "12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி, "கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை. எனவே ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் இன்னும் அமல்படுத்தப்படாமல், பல ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை.

அறிவு , திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும். தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம். அதேபோன்று, ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு நடத்த வேண்டும். இதுதொடர்பான விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்!

ABOUT THE AUTHOR

...view details