தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எல்லோரும் எல்லாமும்..' - மருத்துவ வசதி குறித்து உயர்நீதிமன்றம் கருத்து - chennai highcourt judgement

சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 2, 2021, 11:05 PM IST

சென்னை: கரோனா சிகிச்சை மையங்களில் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி, முத்துக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, "தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்த போதும், கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அபாயகரமானதாக உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

கரோனா இரண்டாவது அலையை தடுக்க தனியார், அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் மோசமான நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அனைத்து பிரிவினருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என தெரிவித்தனர். மேலும் இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details