சென்னை:திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இ- டெண்டரில் முறைகேடு நடைபெற்றும் உள்ளது. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்டப் பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகளுடனும் காணப்பட்டன.
தரமற்ற உணவுப்பொருட்களைத் தடுக்காத அமைச்சர்கள்:இதுபோன்ற தரமற்ற பொருட்கள் விநியோகிப்பதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தனது குற்றச்சாட்டு புகார் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தரமற்ற பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.