சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய சிறுபான்மைச் செயலாளர் சையது இப்ராஹிம் பரப்புரை செய்துவருகிறார்.
அதேபோல, கோவை மாநகராட்சியில் 95ஆவது வார்டில் பரப்புரை மேற்கொள்ள சென்ற தன்னை ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், தன்னை பரப்புரை செய்ய விடாமல் தடுக்ககூடாது எனவும் உத்தரவிடக் கோரி சையது இப்ராஹிம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப். 16) விசாரணைக்கு வந்தபோது, பதட்டமான பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் செல்ல வேண்டாம் என கடிதம் அனுப்பியும், அதை மீறி பரப்புரை செய்ததாக சையது இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.