தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குற்ற விசாரணை அடையாளச் சட்டப்பிரிவுக்குத் தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - சட்டப் பிரிவுக்கு தடை கோரிய வழக்கில்

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாளச் சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 19, 2022, 4:29 PM IST

சென்னை:குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாளச்சட்டம் தனிமனித சுதந்திரத்தைப்பறிப்பதாகவும்; அவற்றைத் தடை செய்யவேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படுபவர்களின் கை ரேகைப்பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரைப்பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும் காவல் துறை மற்றும் சிறை அலுவலர்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் குற்ற விசாரணை அடையாளச்சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்றுள்ள இச்சட்டம், கடந்த 2022ஆம் ஆண்டும் ஏப்.18ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தை, உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக்கோரி சென்னையைச்சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், 'மக்கள் நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் எந்த சட்டமும் இயற்ற முடியாது எனவும், அலுவலர்களுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை என்றும்; இதுசம்பந்தமான உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது என்றும்; இயற்கை நீதிக்கு முரணானது' எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று (செப்.19) விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாளச் சட்டப்பிரிவுகளை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களில் மனுவுக்குப் பதிலளிக்கும் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் மத நல்லிணக்கத்துடன் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details