தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2022, 5:52 PM IST

ETV Bharat / city

ஆன்மிக சுற்றுலா தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வெளிநாடுகளிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேல் தங்கம் உள்ளிட்ட பொருள்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும் போது முன்கூட்டியே சுங்க அலுவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
ஆன்மிக சுற்றுலா தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: இலங்கையை சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம் என்பவர் மனைவி இரண்டு குழந்தைகளுடன் 2017ஆம் ஆண்டு ஆன்மிக சுற்றுலாவிற்காக சென்னை விமானநிலையம் வந்தார். இவர்களிடம் 1,594 கிராம் கொண்ட 43 லட்சத்து 90 ஆயிரத்து 754 ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 112 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இருந்தது. இதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சந்திரசேகரம் விஜயசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில், "வெளிநாடுகளில் இருந்து அணிந்து வரும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களுக்கு சுங்க வரி செலுத்த தேவையில்லை என்று 2014ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கில் விலக்கு அளிக்க வேண்டும். அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி சரவணன், வெளிநாட்டினர் உடமைகள் விதி 1998-இன் படி கேரள உயர் நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் இதையடுத்து 2016ஆம் ஆண்டு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி வெளிநாடுகளிலிருந்து வருவோர் அணிந்துள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், இதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும்.

ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தவர்களிடம்இவ்வளவு நகைகள் மற்றும் மதுபாட்டில்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேல் தங்கம் உள்ளிட்ட பொருள்களை எடுத்துவரும் போது முன்கூட்டியே சுங்க துறையிடம் தெரிவிக்க வேண்டும். சுங்க வரித்துறை உத்தரவில் எந்தவிதமான தவறும் இல்லை. இதில் தலையிட தேவையில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க:தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனர் வீட்டில் 50 சவரன் தங்க நகைகள் மாயம்

ABOUT THE AUTHOR

...view details