சென்னை:சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், கடந்த அக்டோபரில் அவரை கைது செய்தனர்.
குண்டாஸில் சிறை
பின்னர், குண்டர் சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு, மார்ச் 9ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார்? காவல் துறையை மதிக்க மாட்டார்? சட்டத்தை மதிக்கமாட்டார்? அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என கண்டனம் தெரிவித்த நீதிபதி குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.