தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு வாளியுடன் சென்று நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த உள்ளேன் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அதிரடி - சென்னை உயர் நீதிமன்றம்

ஒரு வாளி, துப்புரவு உபகரணங்களுடன் சென்று நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

By

Published : Jul 14, 2021, 10:47 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், 'மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் பாதுகாப்பின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடிவதில்லை.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலையில் இருக்கிறது. நீதிமன்ற வளாகத்தைத் தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றி பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

எல்லாரும் வாங்க...

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில், '19 தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் பேசிய தலைமை நீதிபதி,"நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதை நானும் கவனித்தேன்.

எனவே, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நானே நேரடியாக ஒரு வாளி, துப்புரவு உபகரணங்களுடன் வந்து நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்.

இந்தப் பணிக்கு தன்னுடன் அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் ஆகியோரும் இணைந்து வந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கோபத்தில் ராகுல் வெளிநடப்பு: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details