சென்னை:கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றன.
இதையடுத்து இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 9ம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.