தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.17 லட்சம் மோசடி வழக்கு; ஈபிஎஸ் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்ததாகக் கைதான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jan 24, 2022, 6:01 PM IST

சேலம்: ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. அவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதற்காக கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 17 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக சில ஆண்டுகளாக இருந்த மணி குறித்து பணமோசடி செய்துவிட்டதாகப் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கைது நடவடிக்கை

மேலும் மணிக்குப் பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். இதேபோன்று தமிழ்ச்செல்வனைத் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது காவல் துறையில் புகார் அளித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த மணியை சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில் தன் மீதான புகார் பொய்ப்புகார் என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: TN Governor's House: குடியரசு தின தேநீர் விருந்து உபசரிப்பு ஒத்திவைப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details